"டெல்லி நிஜாமுதீன் பேச்சு மனித இனத்துக்கு எதிரான குற்றச்செயல்": கேரள ஆளுனர் ஆரிப் முகமதுகான் கடும் கண்டனம்

"டெல்லி நிஜாமுதீன் பேச்சு மனித இனத்துக்கு எதிரான குற்றச்செயல்": கேரள ஆளுனர் ஆரிப் முகமதுகான் கடும் கண்டனம்

Update: 2020-04-02 06:42 GMT

டெல்லியில் எச்சரிக்கைகளை மீறி இஸ்லாமிய தப்ளிகி ஜமாத் மாநாடு நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் சுமார் 7 ஆயிரம் பேர்களை பங்கேற்க செய்தவர் மார்காஸ் மவுலானா என்கிற அமைப்பின் போதனையாளரும், நிர்வாகியுமான நிஜாமுதீன். இந்த நிகழ்ச்சியின் போது தான் நூற்றுக்ககணக்கனவர்களுக்கு கொரோனா தொற்று ஒரே சமயத்தில் ஏற்பட்டு இன்று இந்தியாவையே குலுங்க வைத்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் மவுலானா நிஜாமுதீன் பேசுகையில் "கொரோனா வரும், போகும் ஆனால் இஸ்லாம் மீதான நம்பிக்கை நமக்கு எப்போதும் நிலையாக இருக்க வேண்டும், முஸ்லிம்கள் ஒன்றாக இருக்க கூடாது அவர்கள் நமாஸ் செய்யக் கூடாது என்று அரசாங்கம் கூறுவது முஸ்லிம்களை பிரிக்கும் சதி என கூறிய அவர் கொரோனா வைரசை நம்பாதீர்கள், நமாஸ் பாராயணத்தை ஒருபோதும் நிறுத்தாதீர்கள் என்று கூறினார். மேலும் "அல்லா அருகில் இருக்கும் போது வைரஸ் நம்மை எப்படி தொட முடியும்?", "கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம்.. அது முஸ்லிம்களை பிரிக்கும் அரசின் சதி!" என்றும் கூறினார்.

இந்த நிலையில் நிஜாமுதீனின் பொறுப்பற்ற பழமைவாத பேச்சுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் ABP தொலைகாட்சியில் கூறுகையில் ''டெல்லி மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஆனால் அவை ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதது. அங்கு பேசிய பேச்சுகள் கிரிமினல் குற்றம், நாட்டுக்கு எதிரான குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், சமூகவிலகலை சதி என்று பேசியதை ஏற்க முடியாது. இது குற்றச் செயல்'' எனக் கூறினார்.

Similar News