தனுஷ் நடிக்கும் "பட்டாசு" திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகிறது!

தனுஷ் நடிக்கும் "பட்டாசு" திரைப்படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகிறது!

Update: 2019-12-16 09:12 GMT

தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக போகும் படம் பட்டாசு. இப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கிறார். மேலும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் 2019ஆம் ஆண்டு விஸ்வாசம் படத்தை தயாரித்தது.


பட்டாசு படம் ஜனவரி 16ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார். மேலும் இப்படத்தின் motion போஸ்டர் மிக குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளத்தில் வைரல் ஆனது .


இப்படத்தில் நவீன் சந்திரா, சினேகா, மெஹரீன் பிர்சாடா, மற்றும் இன்னும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
விவேக் -மெரிவின் படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இவர்கள் அமைத்த சிங்கள் ட்ரக் " சில் ப்ரோ" பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இவ்வாறு கூறினார் தயாரிப்பாளர் தியாகராஜன்.


Similar News