“சந்திக்க முடியாது” என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு! கர்நாடக சபாநாயகரின் மிரட்டலுக்கு பதிலடி!!

“சந்திக்க முடியாது” என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு! கர்நாடக சபாநாயகரின் மிரட்டலுக்கு பதிலடி!!

Update: 2019-07-23 06:44 GMT


கர்நாடக மாநிலத்தில் ஆளும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்.எல்.ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே, 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப்பெற்றனர். அவர்கள் தங்களின் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.


இவர்களைச் சமாதானப்படுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பண முதலையான அமைச்சர் டி.கே.சிவக்குமார் முயற்சி எடுத்தார். அவரின் குதிரை பேரம் தோல்வியில் முடிந்தது.





தங்கள் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறிவிட்டனர். ஆனால் இவர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமார், ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை. அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டசபை நடவடிக்கைகளை கேலிகூத்தாக்கி வருகிறார். அதாவது எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு தாமதப்படுத்தி வருகிறார்.
கடந்த வியாழன் அன்று சட்டசபையை அவர் கூட்டினார். முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீது விவாதம் என்ற பெயரில் கேலி கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர். வியாழன், வெள்ளி ஆகிய  2 நாள்களாக விவாதம் நடந்தி விட்டு வாக்கெடுப்பை நடத்தாமல் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார்.


நேற்று நடந்த சட்டசபை கூட்டத்திலும் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. சபையை இன்றைக்கு ஒத்தி வைத்தார் சபாநாயகர் ரமேஷ் குமார். 


இதற்கிடையே, அதிர்ப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை 11 மணிக்கு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி மிரட்டி இருந்தார். இதன் மூலம் குமாரசாமி ஆட்சியை தக்க வைக்க மேலும் ஒரு நாடகத்தை அரகேற்றினார் சபாநாயகர். எப்படியாவது குதிரை பேரத்தின் மூலம் அதிருப்தி எம்.எல்.ஏகளை சமாதானப்படுத்தி விடலாம் என்று அதற்காக சபாநாயகர் பகீரதபிரயத்தம் செய்து வருகிறார்.


ஆனால் சபாநாயகரின் இந்த மிரட்டலுக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள்  அசைந்துகொடுக்கவில்லை. தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு ஆஜராக முடியாது என கூறியுள்ளனர். இதன் மூலம் சபாநாயகர் ரமேஷ் குமாரின் மூக்கை உடைத்து உள்ளனர்.


அதிருப்தி எம்எல்ஏக்களில் 13 பேர், நேரில் ஆஜராவதற்கு 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டு சபாநாயகர் பாணியிலேயே கடிதம் எழுதி உள்ளனர். 


சபாநாயகர் ரமேஷ் குமாரின் இந்த கேலிகூத்தை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 


Similar News