தீபாவளி பண்டிகையை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் தலைகள் : ஐக்கிய நாடுகளின் அஞ்சல் அமைப்பு வெளியிடுகிறது

தீபாவளி பண்டிகையை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் தலைகள் : ஐக்கிய நாடுகளின் அஞ்சல் அமைப்பு வெளியிடுகிறது

Update: 2018-09-10 16:30 GMT

ஐக்கிய நாடுகளின் அஞ்சல் அமைப்பு, அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையை நினைவு கூறும் வகையில் சிறப்பு தபால் தலைகளை வெளியிடுகிறது. தி யுனைட்டட் நேஷன்ஸ் போஸ்டல் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு நியுயார்க் சிறப்பு நிகழ்வுகள் தாளை அக்டோபர் 19 அன்று இந்திய பண்டிகையை நினைவு கூறும் வகையில் வெளியிடுகிறது என “இந்தியன் எக்ஸ்பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.


“தீபத் திருநாளாம் தீபாவளியை தீவாளி என்றும் அழைப்பதுண்டு. இது கொண்டாட்டத்தின் உச்சமாக இந்தியா முழுவதிலும் ஏன் பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களாலும் உலகெங்கும் இத் திருநாள் கொண்டாடப்படுகிறது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவின் சார்பாக, ஐக்கிய நாடுகள் அமைப்பில் நிரந்திர பிரதிநிதியாக உள்ள சையத் அக்பருதீன் இதை டிவிட்டரிலும் ட்வீட் செய்து இந்த முடிவை பெரிதும் வரவேற்றுள்ளார்.


வெளியிடப்படவுள்ள தபால் தலை இதழில் ஐக்கிய நாடுகளின் தலைமையக கட்டிடத்தின் பின்புலத்தில் “ஹேப்பி திவாளி” என்ற வாசகம் வெளிச்சம் பீறிட பொறிக்கப்பட்டுள்ளது. இப்பண்டிகையின் சுவையை கூட்ட இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. இந்த இதழில் $1.15 மதிப்பிலான பத்து தபால் தலைகள் இடம்பெற்றுள்ளன மற்றும் அதிலுள்ள கட்டங்களில் பண்டிகையின் அடையளமான தீபத்தை குறிக்கும் வகையில் “அகல்தீபங்கள்” இடம்பெற்றுள்ளன.


வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த தபால் தலைகள் நாணய வடிவிலோ அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையிலோ விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News