பதவிக்காக மாறன் சகோதரர்கள் வீசிய தூண்டிலா சர்கார்? கார்பரேட் அரசியல் நடத்தும் தி.மு.க!

பதவிக்காக மாறன் சகோதரர்கள் வீசிய தூண்டிலா சர்கார்? கார்பரேட் அரசியல் நடத்தும் தி.மு.க!

Update: 2018-11-13 13:07 GMT

கலாநிதி மாறன் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல தமிழக அரசின் இலவசப் பொருட்களை எரித்து, இலவசத் திட்டங்களை மறுத்து வன்முறையைத் தூண்டுவதாக திரைப்படம் அமைந்துள்ளதாக அனைவரும் கருதுகிறார்கள்.
இந்தத் திரைப்படம் குறுகிய நோக்கத்தோடு ஆளுங்கட்சியை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு கட்சி கொண்டு வந்தத் திட்டங்களை அவமானப்படுத்தினால், அந்தக் கட்சியில் இருப்பவர்களும் அதனால் பயனடைந்தவர்களும் கொதித்தெழுவார்கள். பொது மக்கள் தான் சர்கார் திரைப்படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனாலேயே அவை நீக்கப்பட்டன. ஆனால் தி.மு.க குறித்த ஒரு காட்சி கூட எதிராக அமையாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் கதையைத் திருடியதாக வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. கதை திருடியவர், சுய சிந்தனை இல்லாத அவர், அரசு சமூகத்தில் ஏற்ற தாழ்வு இருக்கக் கூடாது என பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வருகிறது என்பது தெரியாமல் படம் எடுத்துள்ளார்.


சர்கார் படத்தை தயாரித்தவர் மாறன் சகோதரர்கள். இவர்கள் ஸ்டாலினை திருப்திப்படுத்தவே இது போன்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் விஜய் பலிகடா ஆகி விட்டார். கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், அவர் உயிருடன் இல்லை. தற்போது ஸ்டாலின் தான் எல்லாம் என்பதால், அவரைத் திருப்தி படுத்தினால் பதவி கிடைக்கும் என்பதற்காகத் தான் இப்படி ஒருப் படத்தை எடுத்துள்ளனர்" என்று கூறி சர்கார் படம் வெளிவந்ததன் காரணத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

Similar News