"ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள் புத்தரை போல் பேசலாமா?" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான சாடல் #DMK #MKStalin #Udhayanithi @RajBhalajioffl

"ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள் புத்தரை போல் பேசலாமா?" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான சாடல் #DMK #MKStalin #Udhayanithi @RajBhalajioffl

Update: 2020-07-22 09:14 GMT

தி.மு.க'வையும் அதன் தலைமையின் நடவடிக்கைகளையும் சமூக ஊடகம் முதல் சாமானியன் வரை மட்டுமல்லாது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் கூட கலாய்த்து தள்ளுகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனி சிறப்பு வாய்ந்தவர். தற்பொழுது ஒரு அறிக்கை ஒன்றை சமூக வலைதளம் வழியாக விடுத்துள்ளார் அதில் தி.மு.க'வின் செயல்பாடுகளையும் அதன் தலைமையையும் சகட்டுமேனிக்கு விளாசி தள்ளியுள்ளார்.

அதில், "சீவிச் சிங்காரித்து, சிகை அலங்காரம் செய்துகொண்டு மூன்று கேமராக்கள் முன்னால் வடநாட்டு வாத்தியார் எழுதித் தரும் அறிக்கைகளை வாசித்து கொரோனா காலத்திலும் இடைவிடாது படப்பிடிப்பு அரசியல் நடத்தும் முக.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு குறித்தெல்லாம் சவுடால் பேசலாமா?



பத்திரிக்கை ஊழியர்களை பட்டப்பகலில் படுகொலை செய்தவர்கள், பால்மலரை எரித்து கொன்று மூட்டை கட்டி முட்புதரில் எறிந்தவர்கள், புத்தரை போன்று நடிக்கலாமா?



நில அபகரிப்புகளால் மக்களின் நிம்மதியை குலைத்தவர்கள், சைகோ கொலைகள் சரம் சரமாய் படுகொலைகள் என சட்டம் ஒழுங்கை சீரழித்தவர்கள், உத்தமர் வேஷம் போடலாமா?



ஓசி தேங்காய் முதல் ஓசி பிரியாணி வரை ஒன்றையும் விடாதவர்கள், நட்புக்கும் நஞ்சூட்டி முடித்தவர்கள்; நடைபயிற்சியையும் கொலை பயிற்சி ஆக்கியவர்களுக்கு குற்றம் குறை கூற தகுதி உண்டா?



பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், அதற்கான தோட்டாக்களை தயாரிப்பதற்கு தொழிற்சாலை வைத்தும் சண்டியர்தனம் செய்கின்ற ஒருவரை சட்டமன்ற உறுப்பினராய் கொண்டியிருக்கும் சண்டாளர்கள். இப்படி வன்முறைக்கே வடிவான திமுக சாதிமத பூசலின்றி சட்டம் ஒழுங்கை பேணிகாத்து தவறிழைப்பவர்கள் யாராயினும் தயவு காட்டாது நீதியின் மாண்பை நிலை நாட்டும் எளிமைச் சாமானியர் எடப்பாடியார் அரசை குறித்து விமர்சனம் செய்யலாமா? நாட்டின் ரகசியங்களை அண்டை நாட்டுக்கு கசியவிட்ட தேச விரோத குற்றச்சாட்டிற்காகவும்,



சட்டம் ஒழுங்கை சீரழித்ததற்காகவும், மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கருப்பர் கூட்டத்தின் கையாள் திமுகவுக்கும் அதன் தலைவர் முக.ஸ்டாலினுக்கும், எடப்பாடியார் அரசை விமர்சனம் செய்ய எள்ளளவும் அருகதை இல்லை.. அது இப்போதும் இல்லை.. எப்போதும் இல்லை!!" என குறிப்பிட்டுள்ளார்.




வழக்கம்போல் இதை கண்டு பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க'வினரும் சிரித்து வருகின்றனர்.

Similar News