தி.மு.க எம்.எல்.ஏ மீது அரசு நில அபகரிப்பு வழக்கு : உரிய விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தி.மு.க எம்.எல்.ஏ மீது அரசு நில அபகரிப்பு வழக்கு : உரிய விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Update: 2019-02-21 19:28 GMT

தி.மு.க முன்னாள் மேயரும், சென்னை சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம் மீதுள்ள அரசு நில அபகரிப்பு புகார் மீது உரிய விசாரணை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை, தி.மு.க சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மா.சுப்ரமணியம், அவரது மனைவி காஞ்சனாவுக்கு மாற்றம் செய்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு இடத்தை மோசடி செய்து அபகரித்துள்ளதாகவும், அவரிடமிருந்து இடத்தை மீட்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


பார்த்திபன் புகாரில் உரிய விசாரணை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Source : News J. MHC orders proper investigation in land grab complaint against DMK MLA

Similar News