கத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..!

கத்துனாங்க.. கதறுனாங்க.. அப்பவும் விடலையே : இருட்டு கட்டியதும் சுவர் ஏறி குதித்து தலைதெறிக்க ஓடிய தி.மு.க.வினர்..!

Update: 2019-06-26 06:13 GMT

பிரியாணிக்கடை, பியூட்டி பார்லரில் ஆரம்பித்து அரசு அலவலகம் வரை திமுகவின் போலி அரசியல் போர்வை விஸ்தாரமாக விரித்து விடப்பட்டுள்ளது. முந்தைய அரசியல் சொதப்பலை போலவே சமீபத்தில் ஒரு சம்பவம் கோவையில் அரங்கேறி இருக்கிறது.


கோவையில், குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக, தி.மு.க.,வினர், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அவர்களை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில், தங்க வைத்தனர்.


இப்படி கைது செய்யப்படுவோரை, மாலை, 5:00 மணிக்கு மேல் விடுவிப்பது வழக்கம். ஆனால், இரவு, 7:00 மணியாகியும், யாரும் விடுவிக்கப்படவில்லை. இதனால், தங்களை, 15 நாள் நீதிமன்ற
காவலில் வைத்து விடுவர் என்ற அச்சம், தி.மு.க.,வினர் மத்தியில் பரவியது.


உடனே, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அனைவரும், 'விடுதலை செய்… விடுதலை செய்…' என, கோஷம் எழுப்பினர். அப்படியிருந்தும் விடுவிக்கப்படாததால், சில வக்கீல்கள் உட்பட, 25க்கும் மேற்பட்ட, தி.மு.க., வினர் சுவர் ஏறி குதித்து, வெளியில் சென்று விட்டனர்.


பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்கள் தப்பிச் செல்வதை தடுக்காமல், சிரித்தபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். ஒருவழியாக, இரவு, அனைவரையும் விடுதலை செய்ய, 'விட்டால் போதும்' என, தி.மு.க.,வினர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.


Similar News