நூதன திருட்டில் தி.மு.க : 28 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு இலங்கை நபருக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுதந்த தி.மு.க., பிரமுகர்.!

நூதன திருட்டில் தி.மு.க : 28 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு இலங்கை நபருக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுதந்த தி.மு.க., பிரமுகர்.!

Update: 2019-09-30 10:12 GMT

போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலம் பாஸ்போர்ட் பெற்று, இலங்கையை சேர்ந்த நபரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற விவகாரத்தில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகரும், அவரது பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இலங்கையைச் சேர்ந்த ஒருவர், போலி ஆவணங்கள் தயாரித்து அதன் மூலமாக  பாஸ்போர்ட் பெற்று கனடாவுக்கு செல்ல உள்ளதாக சென்னை காவல்துறையினருக்கு சில நாட்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை விமான நிலையத்தில், திருச்சியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.


அப்போது அவர், இலங்கையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது உறுதியானது. மேற்கொண்டு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் ஓடக்காட்டைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் குமார் என்பவர் உதவியது தெரியவந்துள்ளது. ராஜ்மோகன் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளராக உள்ளார். இவர், பிரேம்குமாரிடம், 28 லட்சம் ரூபாய் பெற்று, போலி ஆவணங்கள் பயன்படுத்தி, பாஸ்போர்ட் பெற உதவியதாக கூறப்படுகிறது.


ராஜ்மோகன், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும்போது, இதே பாணியில், ஏழு பேரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதில், முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளது. தலைமறைவானவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.


Similar News