முன்னாள் மேயர் கொலையில் தி.மு.க வின் முக்கிய புள்ளிகள்? போலீசார் தீவிர விசாரணை !

முன்னாள் மேயர் கொலையில் தி.மு.க வின் முக்கிய புள்ளிகள்? போலீசார் தீவிர விசாரணை !

Update: 2019-07-30 07:16 GMT

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருக சங்கரனுடன் மேலப்பாளையம் என்ஜினீயர்ஸ் காலனியில் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி உமா மகேஸ்வரியின் வீட்டில் புகுந்த மர்மகும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. வீட்டில் இருந்த அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.


இது திமுகவின் உட் கட்சி பூசலால் நடந்த கொலை என நிருபணம் ஆனதுஎதனால் இந்த கொலை நடந்தது எண்டு விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன


இரண்டு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தி.மு.க.வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அக்கட்சியினர் பலர் தயாராகி வருகின்றனர்


மீண்டும் உமா மகேஸ்வரி மேயர் தேர்தலில் போட்டியிட கூடாது என்பதற்காக அவரை திட்டமிட்டு திமுகவினர் தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


இதனால் ‘அரசியல் சதி’ காரணமாக அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.


இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன், தனி ஆளாக சென்று உமா மகேஸ்வரி உள்பட 3 பேரையும் நானே கொலை செய்தேன் என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார். இது போலீசுக்கு வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகேயனுடன் கூலிப்படை கொலையாளிகள் சேர்ந்தே இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்று போலீசார்தரப்பில் கூறுகின்றனர்.


இந்த கொலையில் தி.மு.க வின் பெரிய புள்ளிகளை காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கார்த்திகேயன் கொலையில் தனக்கு மட்டுமே தொடர்பு இருப்பதாக கூறி இருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகமாக உள்ளது.


கூலிப்படையினர் மாட்டி கொண்டால் பின்னணியில் இருப்பவர்களை உடனே காட்டி கொடுத்துவிடுவார்கள் என்ற காரணத்தினால் கார்த்திகேயன் தன்னை மட்டுமே கொலையில் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளித்திருக்கலாம் என்ற பின்னணியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


கொலைக்கான முழு பின்னணி என்ன? என்பது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கொலை தொடர்பாக திமுகவின் சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் சன்னாசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.


நெல்லையில் வசித்து வந்த சீனியம்மாள் கடந்த ஓராண்டாக மதுரையில் உள்ள தனது மகள் வீட்டில் கணவருடன் தங்கியுள்ளார். இன்று அல்லது நாளை 2 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது. அதே நேரத்தில் உமா மகேஸ்வரியின் மற்ற அரசியல் எதிரிகள் யாரேனும் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று நெல்லை சென்று விசாரணை நடத்துகிறார்கள். அப்போது உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் திரட்டி வைத்துள்ள ஆதாரங்களை பெற்று அடுத்தகட்ட விசாரணையில் இறங்கி உள்ளனர்.


கொலையாளி கார்த்திகேயன் கொலை நடந்த அன்று செல்போனில் யார்-யாருடன் பேசியுள்ளார்? அவரை தொடர்பு கொண்டு பேசியவர்கள் யார்? என்பது பற்றிய பட்டியலை எடுத்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் அவருடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 3 பேர் கொலை விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Similar News