சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை - அமைச்சர் வேலுமணி!

சென்னையில் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை - அமைச்சர் வேலுமணி!

Update: 2020-04-05 02:50 GMT

சென்னை மந்தைவெளி பகுதியை இயந்திரங்கள் மூலம் தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன்லோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் " கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னையில் நாளை முதல் வீடு வீடாக சென்று கொரோனா சோதனை" என தெரிவித்தார்.

சென்னையில் அனைத்து வீடுகளிலும் தினம்தோறும் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதற்கு மருத்துவம் மாநகராட்சி மூலம் அளிக்கவும் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி மூலம் செயல் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும் அந்தப் பணி நாளை முதல் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 10 லட்சம் கட்டடங்களில் 75 முதல் 100 வீடுகளுக்கு ஒரு குழு என்ற கணக்கில் 16,000 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த ஊழியர்கள் நாளை முதல் இடை விடாது தடுத்து 90 நாட்களுக்கு பணியை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.

Similar News