ஆளை விடுங்கள் போதுமென அலறும் ராகுல் காந்தி - புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி வற்புறுத்தல்!

ஆளை விடுங்கள் போதுமென அலறும் ராகுல் காந்தி - புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படி வற்புறுத்தல்!

Update: 2019-05-28 05:00 GMT

தேர்தல் தோல்வி எதிரொலி காங்கிரசில் குழப்பம் நிலவி வருகிறது. என்ன செய்வதென்று புரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் காங்கிரசார். இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ராஜினாமா விவகாரத்தில் உறுதியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25-ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறினார்.


காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறிய ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் யாரையும் சந்திக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் அவரை சந்திக்க விரும்புவதாக கூறியும் ராகுல் காந்தி மறுத்துவிட்டார். தனது கூட்டங்கள், சந்திப்புகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார்.


கட்சியின் தூதுவர்களாக மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், கே.சி.வேணு கோபால் ஆகிய இருவர் மட்டும் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள். அவர்கள் சமாதானத்தை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளனர்.


சவாலான இந்த நேரத்தில் கட்சியை நடத்துவதற்கு தகுதியுள்ள, தனது குடும்பத்தை சேராத, அதேசமயம் போதிய அனுபவமும், தலைமைக்குரிய தகுதியும் கொண்ட ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்படியும் அவர்களிடம் ராகுல் காந்தி கூறினார். அதற்குரிய நேரத்தை வழங்கவும் தயாராக இருப்பதாக கூறினார்.


Similar News