காபூல் விமானநிலைய குண்டுவெடிப்பில் 13 பேர் பலி: பின்னணியில் யார் ?
காபூல் விமான நிலையத்தில் ISIS பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்கர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் சில அமெரிக்க ராணுவ வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பல தலிபான் காவலாளிகள் காயமடைந்தனர் என்று தலிபான் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்திற்கு வெளியே கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைப்படை தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தங்களுக்கு உளவு கிடைத்ததாக அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் அதிகாரிகள் கூறியதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
பிரெஞ்சு தூதுவர் ஏற்கனவே விமான நிலையத்தில் இரண்டாவது தாக்குதல் பற்றி எச்சரித்துள்ளார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த குண்டு வெடிப்பு குறித்து ஜனாதிபதி ஜோ பிடனுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிடென் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பில் இருந்தார். அமெரிக்கா தனது 20 ஆண்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதி கட்டத்தில் உள்ள போது இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.