உத்தரபிரதேசத்தில் மசூதியில் மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டுகள் வெடித்து சிதறின! இஸ்லாமிய மதகுரு உட்பட 4 பேர் அதிரடி கைது!

உத்தரபிரதேசத்தில் மசூதியில் மறைத்து வைக்கப்பட்ட வெடி குண்டுகள் வெடித்து சிதறின! இஸ்லாமிய மதகுரு உட்பட 4 பேர் அதிரடி கைது!

Update: 2019-11-14 05:30 GMT

உத்தரபிரதேசத்தில் குஷினகரில் உள்ள ஒரு மசூதியில் இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டிடம் சேதமானது, இது தொடர்பாக மசூதியின் மதகுரு மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மாபெரும் சதி ஒன்றை நடத்த இவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


இது தொடர்பான விசாரணை குறித்து ஜாக்ரான் அறிக்கையின்படி 2019 ஏப்ரல் மாதத்திலேயே வெடிபொருட்கள் வாங்கப்பட்டன. வெடிபொருளை சேமித்து வைத்திருந்த இளைஞர்களிடம் ‘பெரிய ஒரு சதி சம்பவம் ’ திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் இந்த வெடிபொருள்களின் எடை 8-10 கிலோ இருக்கலாம் என ஹாஜி குதுபுதீன் என்பவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தில் ஹாஜி குதுபிதீனின் பேரன் அஷ்பாக்கின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. அஷ்பக் மற்றும் அவரது மனைவி இந்திய ராணுவத்தின் சுகாதாரத் துறையில் ஹைதராபாத்தில் பணியாற்றி வருகிறார்கள், அவர்கள் மூலம் வெடி பொருள்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகிறார்கள்.


கடந்த திங்கள் கிழமை இந்த வெடி சம்பவம் நடைபெற்ற போது அஷ்பாக் குஷினகரில் இருந்ததாக நம்பப்படுகிறது, சம்பவத்தை கேள்விப்பட்ட பின்னர் உடனடியாக மசூதிக்கு வந்து அந்த இடத்தை அவர் சுத்தம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில தினங்களில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றதால் இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி சம்பவம் இருக்கலாம் என்றும் அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.   


தடயவியல் தகவல்களின்படி, மசூதியில் சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருட்களால் இந்த வெடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில், இன்வெர்ட்டர் பேட்டரியில் ஏற்பட்ட வெடிப்பு என நம்பப்பட்டது. இருப்பினும் விசாரணையில் அது அவ்வாறு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.


ஏ.டி.எஸ் கோரக்பூர், புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்ளூர் புலனாய்வு பிரிவு (எல்.ஐ.யூ) குழுக்கள் விசாரணையில் இணைந்துள்ளன. விசாரணையின்போது, அவரும் வேறு சில இளைஞர்களும் மசூதியில் வெடிபொருட்களை வைத்திருந்ததாக மதகுரு ஒப்புக்கொண்டுள்ளார்.இந்த சம்பவத்தில் மசூதியின் ஜன்னல்கள், கதவுகள் உடையும் அளவுக்கு குண்டு வெடிப்பு வலுவாக இருந்துள்ளதாக போலீசார் கூறினர்.




https://www.opindia.com/2019/11/kushinagar-blast-imam-arrested-explosives-mosque/

Similar News