போகர் உருவாக்கிய நவபாஷன மூலவர் - பழனி முருகன் குறித்த ஆச்சர்ய தகவல்கள்.!

போகர் உருவாக்கிய நவபாஷன மூலவர் - பழனி முருகன் குறித்த ஆச்சர்ய தகவல்கள்.!

Update: 2020-08-01 02:59 GMT

முருகப்பெருமானின் மூன்றாவது படை வீடாக திகழ்வது பழனி மலை . பழனி என்பது மலையின் பெயர் மலைக்கு கீழ் உள்ள பகுதிக்கு திருவாவினன் குடி என்று பெயர். இந்த தலத்தில் திரு என்கிற லஷ்மியும் அ என்கிற காமதேனுவும் இனன் என்கிற சூரியனும் இருந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு திருஆ இனன் குடி என்ற பெயர் வந்தது . சங்க காலத்தில் இம்மலைக்கு பொதினி என்று பெயர் இருந்ததாகவும் பின்னர் இதுவே பழனி என்று மறுவியதாகவும் கூறுகிறார்கள்.

போகர் உருவாக்கிய நவபாஷன மூலவ மூர்த்திக்கு விபூதி சந்தனம் நல்லெண்ணை பஞ்சாமிர்தம் என்று நான்கு பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் .இதில் பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது , இதில் சந்தனம் பன்னீர் தவிர மற்றவை சுவாமியின் சிரசில் வைக்கப்பட்டு உடனே அகற்றப்படுகிறது . தலைமுதல் அடி வரை பன்னீரும் சந்தனமும் மட்டுமே ஊற்றபடுகிறது . சிரசு விபூதி பத்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடுகிறது . ஒரு நாளைக்கு ஆறு முறை முருகனுக்கு அபிஷேக அலங்காரம் செய்ய படுகிறது . இரவில் முருகன் மார்பில் மட்டும் சந்தன காப்பு போடப்படுகிறது .

மேலும் தண்டாயுதபாணி விக்ரகம் சூடாகவே இருப்பதால் இரவு முழுவதும் தண்ணீர் தெளிக்கப்படும் . இந்த நீரை காலையில் பக்தர்களுக்கு அபிஷேகத்துடன் கலந்து தருவது வழக்கம் .

இந்த தண்டாயுதபாணி சிலை உளியால் செதுக்கப்பட்டது அல்ல ஆனாலும் அதன் வடிவமைப்பை போகர் தத்ரூபமாக செய்துள்ளார் . இந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு சுகந்த வாசம் இருந்து கொண்டே இருக்கிறது . இதை வெளியில் எந்த இடத்திலும் உணர முடியாது . முருகரே வந்து உத்தரவு கொடுத்த பின்னர் தான் போகர் இந்த நவபாஷாண சிலை உருவாக்க எண்ணம் கொண்டார் பிறகு அம்பாளும் அகத்தியரும் தொடர்ந்து உத்தரவு கொடுக்க தீவரமாக இந்த முயற்சியில் இரங்கினார் போகர் . சுமார் 4000 மூலிகைகளை பல இடங்களில் சென்று சேகரித்தார் .

81 சித்தர்கள் போகரின் உத்தரவு படி இதை தயார் செய்தார்கள் . இத்திருவுருவ சிலையை செய்து முடிக்க ஒன்பது வருடங்கள் ஆனது . தண்டாயுதபாணி சிலைக்கு அருகில் ஒரு சிறிய மரகத லிங்கம் உள்ளது தீபாரதனை செய்யும் போது வலது பக்கத்தில் இதை தரிசிக்கலாம் . தீப ஒளி யின்றி இதை தரிசிக்க இயலாது .

திண்டுக்கல் கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களின் மையமாக உள்ளது பழனி . 

Similar News