எந்த இடத்தில் இருந்தாலும் நின்னு அடிப்பேன் - மஹாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!

எந்த இடத்தில் இருந்தாலும் நின்னு அடிப்பேன் - மஹாராஷ்டிராவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு!

Update: 2019-12-01 12:49 GMT

மஹாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை இன்று கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.


இதேபோல், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தனது நிர்வாக திறன்கள் மூலம் மக்களிடையே நல்ல பெயர் பெற்ற தேவேந்திர பட்நாவிஸ் மீண்டும் பாஜக முதல்வராகிவிட்டால் குஜராத் போல மகாராஷ்ட்ராவில் தொடர்ந்து பாஜக ஆட்சியே வரக்கூடும் என அச்சம் அடைந்த சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பட்னாவிசை முதல்வராக வரவிடாமல் செய்துவிட்டன.


இது மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்புக்கு எதிரானது என்றாலும், பட்நாவிஸ் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.


Similar News