ஹிந்து பெயருடன் போலி ஐ.டி. நிறுவன பணியாளர் அடையாள அட்டையை காட்டி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 'லவ் ஜிகாத்' வாலிபர் கைது !!

ஹிந்து பெயருடன் போலி ஐ.டி. நிறுவன பணியாளர் அடையாள அட்டையை காட்டி, இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 'லவ் ஜிகாத்' வாலிபர் கைது !!

Update: 2020-06-09 11:28 GMT

உத்தரபிரதேசம் மீரட் அருகே உள்ள அஜ்ராடா பகுதியில் வசிப்பவர் வாசிம் அகமது. இவர் நவுச்சண்டி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் ஏதேனும் ஒரு ஹிந்து பெண்ணை எப்படியாவது கவர்ந்து அவளை லவ் ஜிஹாத் முறையில் மனைவியாக்கிக் கொள்ள திட்டமிட்டார். இதற்கான தேடுதல் நடவடிக்கையாக தன்னைப் பற்றிய போலி விவரங்களுடன் அடையாள அட்டையுடன் ஒரு முக நூல் தொடங்கினார்.

அதில் தனது பெயரை தினேஷ் ராவத் என ஸ்டைலான ஹிந்து ஆண் பெயராக வைத்துக் கொண்டார். மேலும் தன்னை ஒரு ஐ.டி.பணியாளராகவும் காட்டிக் கொள்வதற்காக ஒரு போலி ஐ.டி. நிறுவன அடையாள அட்டையை தயார் செய்து அதையும் தனது முகநூல் ப்ரொபைல் பக்கத்தில் இணைத்தார்.

இந்த நிலையில் முகநூலில் வந்த ஹபூரை சேர்ந்த ஒரு ஹிந்து பெண்ணை தேர்ந்தெடுத்து அவரை தினமும் பின்தொடர்ந்து அவர் மனதில் இடம் பிடித்தார். அந்த பெண்ணும் இவர் ஐடி யில் பணி புரியும் ஹிந்து தானே என பழகினார். இந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் வாசிமின் போக்கில் வித்தியாசங்கள் தெரிந்தது. சந்தேகப்பட்ட அந்த பெண் அவருடன் மேலும் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் இருவரும் முன்னர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோவை பயன்படுத்தி வாசிம் மிரட்டி மீண்டும் உறவுக்கு அழைத்தார். பயந்துபோன அந்த பெண் உள்ளூர்வாசி ஒருவர் துணையுடன் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.

போலீசார் விசாரணையில் வாசிமின் எல்லா விவரங்களும் வெளி வந்தன. அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருப்பதை தெரிந்த அந்த பெண் பலத்த அதிர்ச்சி அடைந்தார். போலீசார் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியதுடன் வசீம் என்ற அந்த நபரை கைது செய்து அவனுடைய கைபேசியை பறிமுதல் செய்ததாக கூறினர். ஐ.டி தொழிலாளர் என போலி அடையாள அட்டை வைத்திருந்தது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அவினாஷ் பாண்டே கூறியுள்ளார். மேலும் தப்பியோடிய அசீமை பிடிக்கப் போனபோது அவன் தான் ஒரு பத்திரிக்கையாளர் எனக் கூறி போலி அடையாள அட்டையை காட்டியதாகவும் அவர் கூறினார்.

இதுபோன்ற வழக்கு வெளிச்சத்துக்கு வருவது இது முதல் முறை அல்ல. சமீபத்தில், மீரட் காவல்துறை கடந்த ஒரு வருடமாக தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கை தீர்த்து வைத்தது. லூதியானாவைச் சேர்ந்த ஏக்தா தேஷ்வால் என்ற சிறுமியுடன் உறவு கொள்வதற்காக மீரட்டில் வசிக்கும் ஷாகிப் என்பவன் அமன் என்ற இந்து சிறுவனாக போஸ் கொடுத்தது ஒரு லவ் ஜிஹாத் வழக்கு என்று தெரியவந்தது. இந்த வழக்கில் சிறுமியின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது உடலின் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசி எறிந்த பின்னர் சாகிப்பின் உண்மை அடையாளத்தை அறிந்து போலீசார் வெளிப்படுத்தினர். 

Similar News