மோடி அரசு பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட AIIMS மருத்துவமனை எதுவும் கட்டிமுடிக்க படவில்லை என்ற போலி செய்திகளை பரப்பும் விஷமிகள் : உண்மை நிலை என்ன ?

மோடி அரசு பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட AIIMS மருத்துவமனை எதுவும் கட்டிமுடிக்க படவில்லை என்ற போலி செய்திகளை பரப்பும் விஷமிகள் : உண்மை நிலை என்ன ?

Update: 2019-01-27 16:22 GMT

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பதவிக்கு வந்த பிறகு பல AIIMS மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டன. நரேந்திர மோடி தமிழகத்தில் மதுரைக்கு அருகே உள்ள தோப்பூரில் அமைக்கப்பட உள்ள AIIMS மருத்துவமனையின் அடித்தளம் அமைத்தல் விழாவிற்கு வருகை தந்த சமயத்தில் பல பொய் செய்திகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படுகின்றன.


இந்த சமயத்தில் பரப்பப்படும் மிகப்பெரிய பொய், மோடி அரசு பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட AIIMS மருத்துவமனை எதுவும் கட்டிமுடிக்கபடவில்லை என்ற பொய்.


மோடி பதவியேற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட AIIMS நிலையங்களில், இரண்டு நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாக்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட AIIMS நிலையமும், மங்கலாபுரியில் அறிவிக்கப்பட்ட AIIMS நிலையமும் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.


உத்தர பிரதேசத்தில் உள்ள கோரக்பூர், பஞ்சாபில் உள்ள பட்டிண்டா, மேற்குவங்கத்தில் உள்ள கல்யாணி, ஜார்கண்டில் உள்ள தியோதர் மற்றும் தெலுங்கானாவில் ஹைதெராபாத்ஆகிய நகரங்களில் இந்த 2019 ஆம்வருடம் AIIMS நிலையங்கள் செயல்பட தொடங்க இருக்கிறது.


இதற்கு மேல், குஜராத்தில் ராஜ்கோட்,அஸ்ஸாமில் கம்ரூப், ஹிமாச்சல்பிரதேஷத்தில் பிலாஸ்பூர் மற்றும் ஜம்முகாஷ்மீரில் விஜெய்ப்பூர் மற்றும்அவந்திபுரா ஆகிய நகரங்களில் இந்த மருத்துவமனையை கட்டுவதற்கானஏற்பாடுகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.


இவ்வாறு சில AIIMS நிலையங்கள் கடந்த ஆண்டு தொடங்கியுள்ள நிலையிலும், சில நிலையங்கள் இந்த ஆண்டு தொடங்க இருக்க நிலையிலும், சில நிலையங்கள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் பல்வேறு நிலையங்களில் இருக்கும்பொழுது எந்த AIIMS நிலையங்களும் தொடங்கவில்லை என்பதும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை என்பதும் பொய் செய்தி என்பது தெரிகிறது.

Similar News