நல்ல மழை பொழிவு எதிரொலி: இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 140.57 மில்லியன் டன்களாக உயர்கிறது!

நல்ல மழை பொழிவு எதிரொலி: இந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 140.57 மில்லியன் டன்களாக உயர்கிறது!

Update: 2019-10-10 03:20 GMT

தென் மேற்கு பருவமழை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் சாதகமான மழை பொழிவை அளித்துள்ளது. சில இடங்களில் மிக அதிகமகாவும், சில இடங்களில் போதுமான அளவும், சில இடங்களில் குறைவான அளவில் பெய்த போதிலும் சராசரியாக நல்ல மழை பெய்துள்ளதால் நடப்பு ஆண்டில் இந்திய விவசாயப் பொருள்களின் சராசரி உற்பத்தியில் இந்த ஆண்டு கூடுதலாக 8.4 மில்லியன் டன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®‡à®¤à®©à¯ மூலம் 2019 -20-ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 140.57 மில்லியன் டன்னாக உயரும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.


நாட்டில் இதுவரை பெய்த மழை அளவுகள்படி 84 சதவீத பகுதிகளில் இயல்பானதாகவோ அல்லது அதிகமாகவோ மழை பொழிந்து உள்ளது, à®®à¯€à®¤à®®à¯à®³à¯à®³ பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை என்று என்.பி.எச்.சி சென்ற திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


நடப்பு 2019-20-ஆம் ஆண்டில் பருவமழையின் காரணமாக விதைக்கப்படும் உணவு தானியங்களின் அளவு 140.57 இலட்சம் மெட்ரிக் டன் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®‡à®¤à®©à¯ மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சராசரி உற்பத்தி அளவில் இருந்து இருந்து 8.4 இலட்சம் டன் மெட்ரிக் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


கடந்த ஆண்டு அதிக ஏற்றுமதி தேவை காரணமாக விவசாயிகள் தங்கள் விவசாய பகுதிகளில் 20-25 சதவீதத்தை பாஸ்மதி அல்லாத அரிசியிலிருந்து பஸ்மாபிக்கு மாற்றியுள்ளதால் மொத்த அரிசி விதைக்கப்பட்ட பகுதியில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.


"பீகார், à®’டிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் நீர் வடிவதில் காலதமதாகிறது. இதனால் விதைப்பதற்கு காலதாமதாவதால் இது மகசூலை 2.58 சதவிகிதம் குறைக்கும்" என்று ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான என்.பி.எச்.சி தலைவர் ஹனிஷ் குமார் சின்ஹா ஒரு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 


நடப்பு ஆண்டில் மக்காச்சோளம் பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®†à®©à®¾à®²à¯ பெரிய அளவிலான இராணுவ புழு தொற்று காரணமாக உற்பத்தி 5.75 சதவீதம் குறையக்கூடும்.


சாதாரண வகை சோளம் பரப்பளவு மற்றும் உற்பத்தி முறையே 4.79 சதவீதம் மற்றும் 0.61 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®…தே நேரத்தில் கம்பு விளைச்சல் பகுதி 2.47 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பருப்பு பிரிவில் , à®†à®•à®¸à¯à®Ÿà¯ தொடக்கத்தில் பரவலாக பெய்த மழையால் விதைப்பு அதிகரித்த பின்னர் à®‰à®³à¯à®¨à¯à®¤à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ இதர பருப்பு உற்பத்தி செய்யும் ஏக்கர் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதை அடுத்து அரசு சேமிப்பு கிடங்குகளில் வைத்திருந்த முந்தைய இருப்பை தற்போது வேகமாக வெளியேற்றி வருகிறது. 


அர்ஹார் பயிரிடப்படும் பகுதி 1.69 சதவீதமும், à®‰à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿ 21.27 சதவீதமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®…தே நேரத்தில் யூராட் உற்பத்தி 0.16 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், à®‰à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿à®¯à®¿à®©à¯ அளவு 17.23 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சின்ஹா மேலும் கூறினார்.


எண்ணெய் வித்துக்களில், à®†à®®à®£à®•à¯à®•à¯ பரப்பு 5.32 சதவீதம் அதிகரிக்கும் என்றும் உள்நாட்டு சந்தைகளில் ஆமணக்கு நல்ல விலை காரணமாக உற்பத்தியில் கணிசமான அளவு 21.07 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உற்பத்தி வீழ்ச்சி முறையே 8.90 சதவிகிதம் எள் உற்பத்தியிலும் மற்றும் சூரியகாந்தி உற்பத்தியில் 2.32 சதவிகிதம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, à®®à¯‡à®²à¯à®®à¯ நிலக்கடலை மற்றும் நைகர் விதைகளில் முறையே 4.93 சதவிகிதம் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சோயாபீன் பயிரிடப்படும் பரப்பளவு 5.68 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, à®†à®©à®¾à®²à¯ அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக உற்பத்தி 17.72 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கரும்புகளின் பரப்பளவு 14.32 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பணப்பயிர் விலை விகிதம் நிலையானதாக இருக்க வாய்ப்புள்ளது, à®†à®©à®¾à®²à¯ தற்போது கரும்பு பயிரிடும் விவசாயிகள் சுழற்சி முறையில் மற்ற பயிர்களுக்குச் செல்வதால் உற்பத்தி 5.60 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.


பருத்தி பரப்பளவு மற்றும் உற்பத்தி முறையே 4.32 சதவீதம் மற்றும் 9.99 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தத்தில் இந்த ஆண்டு அரிசி, கோதுமை, கரும்பு ஆகிய முக்கிய உணவுப்பொருள்களின் உற்பத்தியில் வழக்கத்தைவிட முன்னேற்றம் இருக்கும். உணவுப் பொருள்களின் விலைவாசி கட்டுப்பாட்டில் இருக்கும், போதுமான உணவு தானியங்கள் வழக்கமான அளவைவிட அரசால் கிடங்குகளில் இருப்பு வைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.


Inputs from Business Standard.


Similar News