இந்தியாவில் உள்ள பாதி இடங்களில் கொரோனா வைரஸின் சுவடே இல்லை.!

இந்தியாவில் உள்ள பாதி இடங்களில் கொரோனா வைரஸின் சுவடே இல்லை.!

Update: 2020-04-20 09:04 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 23லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் 16ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஒரு சிறிய ஆறுதல் செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் இந்தியாவில் உள்ள பாதி இடங்களில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற செய்தி தான்.

இந்தியா முழுவதும் 736 மாவட்டங்கள் உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி வரை 325 மாவட்டங்களில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி பாதிக்கப்படவில்லை. மேலும் 46% மாவட்டங்களில் கொரோனா வைரஸின் சுவடே இல்லை.

அதில் முக்கியமாக 18 மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிப்பது, தனிமைப்படுத்துவது, சிகிச்சை கொடுப்பது ஆகியவை அரசுக்கு சுலபமான வேலையாக இருக்கும் என கருதப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் தான் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளதாக கண்டிப்பிக்கப்பட்டுள்ளன. 

source: https://www.dinamani.com/india/2020/apr/20/corona-is-not-found-in-half-of-india-3403963.html

Similar News