உடலில் திடீரென ஏற்படும் சுளுக்கு: தீர்வு காண எளியமுறை இதுதான்!
Healthy remedies to cure sprain.
உடலில் திடீரென எதாவது காயங்கள் உண்டாகும் சமயங்களில், உடல் தசையின் லிகமென்ட் விரிவடைகிறது அல்லது லிகமென்ட் கிழிய நேரிடுகிறது. இத்தகைய சிக்கலை சுளுக்கு என்று அழைக்கின்றனர். ஒரு நபரின் உடலில் சுளுக்கு ஏற்படும் போது அந்த நபர் தீவிர வலியை உணர் தொடங்குகிறார். மற்றும் திசுக்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் சுளுக்கு ஏற்படும் பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
உடலில் சுளுக்கு உண்டாவது தீவிரமான சிக்கல் இல்லை. எனினும், இதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகும் சமயங்களில், இது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடுகளினாலும் சுளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தினசரி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் தசைகளில் உண்டாகும் காயங்கள் போன்றவை சுளுக்கு ஏற்படுவதற்கான பிற காரணங்களாகும். தசை வலி மற்றும் தசை பிடிப்பு ஆகியவை சுளுக்கு ஏற்படுள்ளதை உணர்த்தும் சில பொதுவான அறிகுறிகளாகும். சுளுக்கு வலியிலிருந்து மீள நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். வலி குறையும் வரை எந்த வேலையும் செய்யக்கூடாது. பொதுவாக, சுளுக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது.
கல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது வீக்கத்தை நீக்குகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் பான்டேஜ் பயன்படுத்துவதன் மூலம் சுளுக்கிலிருந்து விரைவில் விடுப இயலும். ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தனம் கொடுப்பதும் நன்மை அளிக்கும். இந்த செயல்முறையை சுளுக்கு நீங்கும் வரை தினசரி செய்யவும்.
ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்குகிறது. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தனம் அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும். சுளுக்கு நீங்கும் வரை நாள் ஒன்றுக்கு ஒருமுறை இந்த செயல்முறையை மேற்கொள்ளவும். பெரும்பாலும் கிராம்பு எண்ணெயை பற்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்துகின்றனர். எனினும், இதனை சுளுக்கிலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம் என நிரூபிக்க பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை இந்த செயல்பாட்டை மேற்கொள்ளவும்.
Input & Image courtesy:Logintohealth