இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ திருமணம் - உடனடியாக களத்தில் இறங்கிய இந்து முன்னணி

மதமாற்றம் செய்து கொண்ட கிறிஸ்துவர்களின் திருமணம் இந்து கோயில் நடை பெறுவதை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்து முன்னணி.

Update: 2022-04-18 14:22 GMT

இந்து மதத்தில் இருந்து மதமாற்றம் செய்து கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களுடைய திருமணத்தை ஏன் கிறிஸ்தவ ஆலயங்களில் வைக்கக் கூடாது? அதுக்கு அங்குள்ள திருச்சபை நிராகரிக்கிறதா? இந்து கோவிலில் திருமணத்தை நடைபெறுவதற்கு காரணங்கள் என்ன? என்று பல்வேறு வகையில் கேள்வியை எழுப்பும் முயற்சியும் தற்போது உள்ள ஒரு செய்தி நமக்கு ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் தற்போது திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெறுவதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளது. 


மேலும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விக்னேஷ் பவதாரணி என்ற தம்பதிகளுக்கு இந்து கோவிலில் திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருகின்ற வியாழக்கிழமை 23 ஆம் தேதி கோவிலில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் பத்திரிகை வெளியிட்டுள்ளது இந்து முன்னணி. மேலும் இதுபற்றி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி சார்பில் பல்வேறு கேள்விகளும் எழுப்பபபட்டுள்ளது. 


Source: Facebook 

இந்து ஆலயங்களில் உள்ள கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை சீர்குலைககும் முயற்சியாக இந்து கோவில்களின் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை சீர்குலைக்கும் முயற்சியா? அல்லது தேவாலயங்களில் மதமாற்றம் செய்து கொண்டவர்களில திருமணத்திற்கு அனுமதி தருவதற்கு மறுக்கிறதா திருச்சபை? இந்த செயல் மூலம் கோவில் நிர்வாகம் தன்னுடைய முழு திறனையும் இழந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் அதற்கான செயலில் களமிறங்க உள்ளதாகவும் இந்து முன்னணி சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Input & Image courtesy: Facebook Source

Tags:    

Similar News