"ராணுவத்தை அழைத்திருந்தால், சீக்கியர்கள் படுகொலையை தடுத்திருக்க முடியும்" - மன்மோகன் சிங் ஒப்புதல்!

"ராணுவத்தை அழைத்திருந்தால், சீக்கியர்கள் படுகொலையை தடுத்திருக்க முடியும்" - மன்மோகன் சிங் ஒப்புதல்!

Update: 2019-12-05 10:02 GMT

1984-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ்காரர்களால், கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களே முன்னின்று இந்த கலவரத்தை நடத்தினர். இதில் 3350 அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள், இந்தப் படுகொலை 8 ஆயிரத்திற்கும் மேல் 17 ஆயிரத்திற்குள் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சீக்கியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.


இந்த படுகொலையில்காங்கிரஸ் கட்சியினர் நேரடியாகவே ஈடுபட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதோடு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை தடுக்க எந்த முயற்சியும் அப்போதைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.


இந்த குற்றச்சாட்டு உண்மை என்று ஆமோதிக்கும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடந்த முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜராலின் 100-வவது பிறந்த தின விழாவில் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கடந்த 1984-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக நரசிம்மராவ் இருந்தார். அவரை சந்தித்த ஐ.கே.குஜரால், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உடனே ராணுவத்தை அழைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் குஜ்ராலின் பேச்சை கேட்கவில்லை. அவரது பேச்சைக் கேட்டு உடனே ராணுவத்தை அழைத்திருந்தால், 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தடுக்கப்பட்டிருக்கும்.


இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


Similar News