மிஷனரிகள் ஆக்கிரமித்த அச்சிறுபாக்கம் மலை - உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு!

மலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய மாதா சர்ச் உடனடியாக அகற்ற கலெக்டர் உத்தரவு.

Update: 2022-08-09 02:31 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அச்சரப்பாக்கம் மலை மாதா சர்ச் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதற்காக செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பள்ளிபேட்டை ஊராட்சி உட்பட்ட மேய்க்கால் புறம்போக்கு மற்றும் மலைக்குன்று புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, மலை மாதா சர்ச் தற்போது கட்டப்பட்டுள்ளதாக செய்து பாகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் என்ற ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். 


எனவே மாலையில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டி மலைப்பகுதியில் பிற உயிரினங்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீதான ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்ய 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உத்தரவை பிறப்பித்த இந்த உத்தரவை வருவாய் துறையினர் முறையாக செயல்படுவதால் பொதுநல வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் ராகுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 


நீதிமன்றம் உத்தரவின்படி மலை மாதா சர்ச் ஆக்கிரமித்துள்ள நிலங்களை அளவீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அளவீடு செய்யப்பட்டதில் 19 ஆயிரத்து 820 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் படி சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு வருவாய் துறையினர நவம்பர் மாதம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார்கள். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வேலைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கதாகும். 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News