கிழக்கு லடாக்கில் 40 ஆயிரம் சீன வீரர்கள் குவிப்பு! நம்ப வைத்து கழுத்தறுக்கப் பார்க்கும் சீனா : எந்த நேரத்திலும் தயாராக இருக்க இந்திய விமானப்படைக்கு அறிவுறுத்தல்!

கிழக்கு லடாக்கில் 40 ஆயிரம் சீன வீரர்கள் குவிப்பு! நம்ப வைத்து கழுத்தறுக்கப் பார்க்கும் சீனா : எந்த நேரத்திலும் தயாராக இருக்க இந்திய விமானப்படைக்கு அறிவுறுத்தல்!

Update: 2020-07-23 03:13 GMT

மே மாதத்தில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே, லடாக்கிற்குள் ஊடுருவிய அனைத்து பகுதிகளிலிருந்தும் சீனா துருப்புக்கள் இன்னும் பின்வாங்கவில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில், லடாக்கின் கிழக்கில் உள்ள, எல்லைக் கோட்டுப் பகுதியில், கடந்த ஜூன், 15 வரை, சீனா, 5,000 ராணுவத்தினரை நிறுத்தியது.

எல்லைப் பகுதியை, ஆக்கிரமிக்க முயற்சியில் ஈடுபட்ட போது, ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவத்தினர், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பலி எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமானதால், அந்நாட்டு அரசு பலியானோர் விவரங்களை வெளியிடவில்லை.

இதனை தொடர்ந்து இரு நாடுகள் தரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க, இந்தியா-சீனா இடையே பல கட்டங்களாக ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்ற நிலையில் இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டதால் பதற்றம் ஒரளவுக்கு ஒய்ந்தது.

இருந்தாலும் பாங்காங் ஏரியிலுள்ள டெப்சாங் சமவெளிப் பகுதி, கோக்ரா பகுதியில் சீனாவின் துருப்புக்கள் இன்னும் உள்ளன. ஆதாரங்களின்படி, ஃபிங்கர் 5 பகுதியிலிருந்து வெளியேற சீனர்கள் தயங்குகிறார்கள். 

இந்நிலையில் இந்திய- சீன எல்லைக்கோட்டுபகுதியின் கிழக்கு லடாக்கில் 40 ஆயிரம் சீன துருப்புகள் மற்றும் ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவின் இந்த செயல் இரு தரப்பு படைகளை விலக்கி கொள்வதாக ஏற்பட்ட உடன்பாட்டை மீறியது என கூறப்படுகிறது. முன்னதாக "எந்த சவாலையும் சந்திக்க விமானப்படையினர் தயாராக இருக்க வேண்டும்"  மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது


Similar News