“மோடியின் ஆட்சியில் இந்தியாவின் மதிப்பு, உலக அளவில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது” - அமித்ஷா சிறப்பு கட்டுரை!!

“மோடியின் ஆட்சியில் இந்தியாவின் மதிப்பு, உலக அளவில் புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது” - அமித்ஷா சிறப்பு கட்டுரை!!

Update: 2019-08-23 08:58 GMT


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-


நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 17 லோக்சபா தேர்தல்கள், 22 அரசுகள், 15 பிரதமர்கள் ஆட்சி நடந்தது. இவர்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளித்திருந்தாலும், நீண்டகால வளர்ச்சி திட்டங்கள் என்பது குறைவே. 


55 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் தனக்கு கிடைத்த பல வாய்ப்புக்களை தவறவிட்டு விட்டது. தற்போது காங்கிரஸ் அல்லாத பாஜக கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.


நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது. கடந்த 63 மாதங்களில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல கையெழுத்துக்களை போட்டுள்ளது. 





துணிச்சலாக, வரலாற்று சிறப்பு மிக்கதாக காஷ்மீரில் 370 மற்றும் 35ஏ பிரிவுகளை மோடி ரத்து செய்துள்ளது. 41,000 க்கும் அதிகமானவர்களை கொன்ற பயங்கரவாதத்தை ஒடுக்கும் விதமாக நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும், துணிச்சலான முடிவை எடுத்ததுதான் மோடி மற்ற இந்திய பிரதமர்களில் இருந்து வேறுபட்டு இருப்பதற்கு காரணம்.


பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, முத்தலாக் தடை சட்டம், சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஒரே நாடு ஒரே சட்டம், பயனாளர்களின் கணக்கிற்கு நேரடியாக நிவாரணம் செல்லும் முறை போன்ற நடவடிக்கைகள், இதுவரை இல்லாத இந்தியாவின் மிகுந்த வலிமையான பிரதமராக மோடியை காட்டுகிறது. 


தொழிலதிபர்கள் நாட்டிற்கு வளர்ச்சியை தர முடியாது, உற்பத்தியாளர்கள் மட்டுமே வளர்ச்சியை, வளத்தை உருவாக்க முடியும் என்பதை திடமாக நம்புவதால், ஜிஎஸ்டியை மோடி கொண்டு வந்தார்.





மோடியின் ஆட்சியில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் இந்தியா வலிமையான நாடு என்பதை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. அதே சமயம் சந்திரயான் உள்ளிட்ட வெற்றிகரமான தொழில்நுட்ப திட்டங்களும் இந்தியாவை சர்வதேச அளவிற்கு வளர்ச்சியை பெற்று தந்துள்ளது. 


இவ்வாறு அந்த கட்டுரையில் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.


Similar News