"சங்கி'ன்னா என்னாங்க தப்பு?" அண்ணாமலை IPS அதிரடி!

"சங்கி'ன்னா என்னாங்க தப்பு?" அண்ணாமலை IPS அதிரடி!

Update: 2020-07-31 07:30 GMT

அண்ணாமலை ஐ.பி.எஸ் சமீப காலமாக அவரின் கருத்துக்கள் வாட்ஸ் அப்களில் வலம் வருகின்றன. சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றன. மக்களின் மத்தியில் அரசு பணி கிடைப்பதே அரிது அதிலும் ஐ.பி.எஸ் போன்ற அதிகாரமிக்க பணியை விடுத்து சமூக நலனிலும், தற்சார்பு கொள்கை அரசியலிலும் ஈடுபாடு கொண்டு மாற்றத்தை முன்வைத்து ஒரு இளைஞன் தன்னம்பிக்கையுடன் பேசி வருவதை சிலர் ஆர்வத்துடன் கவனிக்க ஆரமித்துள்ளனர்.

இன்னும் சிலர் போகட்டும் பார்க்கலாம் என காத்திருக்கின்றனர், இன்னும் சிலரோ இது இவருக்கு வேண்டாத வேலை என கூறுகின்றனர். இப்படி கலவையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் அண்ணாமலை முன் மீடியாக்கள் அவரின் பேட்டி'க்காக காத்திருக்கிறார்கள். அவரின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளை எதிர்பார்த்து அதனை திரிக்கவும், இது இப்படியாக இருக்குமோ என்கிற ஆர்வத்தில் மீடியாக்கள் அவரை சுற்றி வலம் வருகின்றன.

அவற்றிற்கு இரு முக்கிய காரணம் ஒன்று மோடி'யை பிடிக்கும் என்று வெளிப்படையாக கூறியது, மற்றொன்று ரஜினியின் அரசியல் வருகையில் இவரை சம்மந்தபடுத்தி வரும் வதந்திகள். இந்த இரண்டுமே இன்று அண்ணாமலை என்றாலே ஆர்வமுடன் சமூக வலைதளங்கள் கவனிக்க துவங்குகின்றன.

அந்த வகையில் நேற்று தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அண்ணாமலை அவர்கள் நிறைய விஷயங்களை பேசினார்,

அதில் "சிங்கம் என என்னை அழைப்பது கர்நாடக மாநில மக்களின் பழக்கம் அதை நான் பெருமையாக இதுவரை எடுத்துகொண்டதில்லை.

மோடியை எனக்கு பிடிக்கும் நான் இதுவரை அவரையும் அமித்ஷா அவர்களையும் சந்தித்ததில்லை.ரஜினி அரசியலுக்கு வராமல் அவரை பற்றி என்னால் கருத்து கூற முடியாது. நான் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவன் இல்லை. இதுவரை ஷாகா நடத்தியதும் இல்லை" என பல கேள்விகளுக்கு தெளிவாக விடையளித்துள்ளார்.

மேலும் "சங்கி என அழைப்பது என்ன தவறு? அது தப்பான சொல் இல்லை சங்பரிவார் அமைப்புகள் சித்தாந்தத்தை மையமாக வைத்து இயங்குகின்றன. இதில் தவறேதும் இல்லையே என மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல் இவரின் இந்த பேட்டியையும் ஊடகங்கள் திரிக்க ஆரமித்துவிட்டன.

Similar News