கோவையில் ஒருவர் விடாமல் சுற்றி வளைத்த தேசிய புலனாய்வு முகமை - மாபெரும் பயங்கரவாத வளையம் முறியடிப்பு.!

கோவையில் ஒருவர் விடாமல் சுற்றி வளைத்த தேசிய புலனாய்வு முகமை - மாபெரும் பயங்கரவாத வளையம் முறியடிப்பு.!

Update: 2019-06-20 10:08 GMT

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது
செய்யப்பட்ட முகமது அசாருதீனின் நண்பர் வீட்டில் இன்று என்ஐஏ அதிகாரிகள்
சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக உக்கடத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் கடந்த வாரம் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரைக் காவலில் எடுத்து கொச்சின் அலுவலகத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


இவர் குனியமுத்தூரைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் டிவிடி உள்ளிட்ட சில
ஆவணங்களைக் கொடுத்ததாக விசாரணையின்போது அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அசாருதீனை அழைத்துக் கொண்டு கோவை,
குனியமுத்தூர் வந்தனர்.


குனியமுத்தூர் பி.கே.புதூர் அருகேயுள்ள சாந்தி நகரைச் சேர்ந்த சினோஜ்
என்பவரின் வீட்டில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறிது நேரம்
சோதனை நீடித்தது. இதைத்தொடர்ந்து 2 ஹார்ட் டிஸ்க்கில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்பின்னர் முகமது அசாருதீனை அழைத்துக்கொண்டு கொச்சிக்குப் புறப்பட்டனர்.


இலங்கை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களா?


இலங்கை
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுடன், கோவையைச் சேர்ந்த
முகமது அசாருதீன்(32), அக்ரம் ஜிந்தா, ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம்
உசேன், இப்ராகிம் என்ற ஷாகின்ஷா ஆகியோருக்கு முகநூல் மூலம்
தொடர்பிருப்பதாக சந்தேகத்தின்பேரில், தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)
அதிகாரிகள் கடந்த ஜூன் 12-ம் தேதி 6 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.


14
செல்போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி
கார்டுகள், 4 ஹார்டு டிஸ்க், 1 இன்டர்நெட் டாங்கில், 13 சிடி, டிவிடிக்கள்,
300 ஏர்கன் தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இறுதியில், முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் இரவில் கைது செய்தனர்.


Similar News