டைம்ஸ் ஸ்கொயரில் ஸ்ரீ ராமர் - பூமி பூஜை அன்று ஒலிக்க இருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள்.!

டைம்ஸ் ஸ்கொயரில் ஸ்ரீ ராமர் - பூமி பூஜை அன்று ஒலிக்க இருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள்.!

Update: 2020-07-30 09:34 GMT

உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்னும் சில நாட்களில் அயோத்தி ராம ஜன்ம பூமியில் நடக்க இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வை பல விதங்களிலும் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க வாழ் இந்துக்கள் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான டைம்ஸ் ஸ்கொயரில் பகவான் ராமரின் உருவப் படங்கள், கோவிலின் வரைபடம், பாடல்கள், வீடியோக்களை ஒளிபரப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமர் கோவில் பூமி பூஜை ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கக் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்பதால் டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள பில்லி போர்டுகளை வாடகைக்கு எடுத்து நாள் முழுவதும் பகவான் ராமரின் உருவப் படங்கள், பாடல்கள் வீடியோக்கள், ராம ஜன்ம பூமியில் கட்டப்பட இருக்கும் கோவிலின் 3D வரைபடங்கள், பூமி பூஜை அன்று நடக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றை LED திரைகளில் ஒளிரச் செய்ய அமெரிக்க வாழ் இந்துக்கள் முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்க இந்தியர் பொது விவகாரக் கமிட்டியின் தலைவர் ஜகதீஷ் சேஹானி கூறுகையில், Nasdaq திரைகளும் 17,000 சதுர அடி பரப்பளவு கொண்ட உயர்ரக LED திரைகளும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடுவதற்காக பயன்படுத்தப்பட உள்ளதாக கூறியிருக்கிறார். பூமி பூஜை நடக்கவிருக்கும் ஆகஸ்ட் 5 அன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை "ஜெய் ஸ்ரீராம்" என்ற கோஷம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படும் என்றும் பகவான் ராமர் மற்றும் கோவிலின் படங்கள் மற்றும் வீடியோக்களோடு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நிகழ்வின் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"இது வாழ்வில் ஒரு முறை வரும் நிகழ்வோ அல்லது நூற்றாண்டில் ஒரு முறை வரும் நிகழ்வோ அல்ல. இது மனித வரலாற்றிலேயே ஒரே ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வு" என்று கூறிய சேஹானி, பூமி பூஜை நடக்கும் நாளில் அமெரிக்க வாழ் இந்துக்கள் டைம்ஸ் ஸ்கொயரில் ஒன்று கூடி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாட இருப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News