மக்களின் வரவேற்பைப் பெற்ற ஜல் சக்தி அபியான் திட்டம் இதுவரை 12 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை!!

மக்களின் வரவேற்பைப் பெற்ற ஜல் சக்தி அபியான் திட்டம் இதுவரை 12 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை!!

Update: 2019-10-10 12:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி,இரண்டாவது முறையாக பதவி ஏற்றபோது புதிய அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்பட்டது, இந்த அமைச்சகத்தின் பெயர் ஜனசக்தி அமைச்சகம்,நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் இந்த துறையை பிரதமர் மோடி உருவாக்கி இருக்கிறார். 


ஜனசக்தி அமைச்சராக கிரிராஜ் சிங் ஷெகாவத் செயல்பட்டு வருகிறார்
சர்வதேச மற்றும் மாநிலங்கள் இடையேயான தண்ணீர் பிரச்சினை, கங்கை நதியை தூய்மைப்படுத்துதல், சுத்தமான குடிநீரை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைச்சகம் கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் பசுமையான சூழலை உருவாக்க இதுவரை 12.35 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு


இருக்கின்றனர் மற்றும்  1.22லட்சம் நீர்நிலை கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது,இத்திட்டம் மக்கள் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.


Similar News