கொரோனாவை ஒழிப்பதற்க்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஜெபக்கூடம் கட்ட முயற்சி? குமரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்…!!

கொரோனாவை ஒழிப்பதற்க்காக அரசு ஒதுக்கிய நிதியில் ஜெபக்கூடம் கட்ட முயற்சி? குமரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்…!!

Update: 2020-04-11 02:56 GMT

குமரி மாவட்டத்தில் கொரானாவை ஒழிப்பதற்க்காக அரசு ஒதுக்கிய நிதியில் கிறுஸ்துவ ஜெப கூடம் நடத்த முயற்சி செய்யும் விதத்தில் நடந்துகொள்வதை விசாரித்து நடவடிக்கையெடுக்ககோரி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் இறைச்சகுளம் காளியப்பன் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் குமரி மாவட்ட ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி அவர்கள் பொறுப்பேற்றது முதல் கிறிஸ்தவ மதம் பரப்பும் செயல்பாடுகளில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் இருந்த பழைய ஓட்டு கட்டிடம் ஒன்றை மருத்துவ கல்லூரி செலவிலேயே சீரமைத்து அதனை சர்ச் ஆக மாற்றி வருவது தெரிய வந்தது.

தற்போது அந்த கட்டிடத்தில் கிறிஸ்தவ பிரத்தனைகள் நடைபெற ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஆகவே கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக செயல்பட இருக்கும் சர்சினை தடைசெய்து இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். அதிலும் கொரோனவை ஒழிப்பதற்காக அரசு ஒதுக்கிய நிதியை ஜெப கூடத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டதாக தெரிகிறது.

மனு கொடுத்தபோது பாரதியஜனதா மாநில துணை தலைவர் எம்ஆர்.காந்தி, நாஞ்சில் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்




 


Similar News