ஜார்கண்ட் தேர்தலில் விறுவிறுப்பு! மதியம் 1 மணியளவில் 44.3 சதவீத வாக்குகள் பதிவு! துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர் பலி!

ஜார்கண்ட் தேர்தலில் விறுவிறுப்பு! மதியம் 1 மணியளவில் 44.3 சதவீத வாக்குகள் பதிவு! துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர் பலி!

Update: 2019-12-07 09:46 GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று இரண்டாவது கட்டமாக 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.


மதியம் 1 மணி வரை ஜார்க்கண்ட் சட்டசபை இடங்களில் வாக்களிப்பு பின்வருமாறு:


காட்ஷிலா- 49.9%


பஹாரகோரா- 52.2%


போட்கா- 48%


சைபாசா- 40.13%


ஜாம்ஷெட்பூர் (கிழக்கு) - 35.3%


ஜாம்ஷெட்பூர் (மேற்கு) - 33.15%


சிசாய்- 54.56%


கோலேபிரா- 46%


ஜுகல்சாய்- 44.1%


மந்தர்- 49.84%


சிம்டேகா- 45.4%


வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் குல்மா சிசாய் தொகுதியில் ஒரு தேர்தல் பூத்தில் கலவரக்காரர் ஒருவரால் தகராறு ஏற்பட்டது. அவரை வீரர்கள் அடக்க சென்றனர். அப்போது அந்த நபர் பாதுகாப்பு படை வீரரிடமிருந்த ஆயுதத்தை பறித்து மற்றொருவரை சுட முயன்றார். இதை பார்த்த இதர வீரர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பீக்கி சூடு நடத்தியதில் அந்த நபர் பலியானார். இதனால் அங்கு வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.  


Source:- NEWS18


Similar News