போன் செய்தால் போதும், வீடு தேடி வரும் மருந்துகள் - அசத்தும் தமிழக அரசு

போன் செய்தால் போதும், வீடு தேடி வரும் மருந்துகள் - அசத்தும் தமிழக அரசு

Update: 2020-04-14 07:07 GMT

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மருந்துகள் வாங்க மருந்து கடைகளில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்ப்பதற்காக சென்னையில் உள்ள 3 ஆயிரம் மருந்தகங்கள் இணைக்கப்பட்டு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் மூலமாக 18001212172 என்ற என் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டால் அவர்கள் வசிக்கும் பகுதியின் உள்ள மருந்து கடைக்கு இணைக்கப்படும், உடனே மருந்தாளர் வீட்டுக்கே சென்று மருத்துவர்களின் குறிப்பை பெறுபவர்கள்.

அதற்குரிய மருந்துகளை அந்தக் குறிப்பின் அடிப்படையில் உரிய மருந்தை, உரிய விலைக்கு வீட்டுக்கு சென்று வழங்குவார்கள் என குறிப்பிட்ட அவர், தற்போது சென்னையில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டம் சில தினங்களில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Similar News