காபூல் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் - ஜோ பைடன் அதிரடி !
இதனை மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் நாட்டை பிடித்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சுமார் 1 லட்சம் பேர் வரை விமானப்படை விமானங்கள் மூலமாக வெளியேறியுள்ளனர்.
காபூல் விமான நிலையத்தில் நேற்று பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேற்று (வியாழக்கிழமை) மாலை காபூல் விமான நிலையதத்ல் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர் உட்பட 60க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனை மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம். உங்களை வேட்டையாடுவோம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என அவர் கூறினார். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் நாட்டை பிடித்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் சுமார் 1 லட்சம் பேர் வரை விமானப்படை விமானங்கள் மூலமாக வெளியேறியுள்ளனர்.
இதனிடையே தாலிபான்களுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி வருகின்ற 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேற்றப்படும் என ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்த காலக்கெடு குறைவாக உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்திய நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் விமான நிலையத்தின் அப்பி நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. சில நிமிடங்களில் ஆப்கானியரை மீட்டு வந்த பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்தி வந்த ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.
வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தின்போது அதிகமான கூட்டம இருந்தது. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தது. ஏற்கனவே விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: BBC Tamil
https://www.bbc.com/tamil/global-58352078