ஆண்டுக்கணக்கில் எடுக்க இது என்ன தசாவதாரமா.? உயிர் பிரச்சனையால் தான் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.! கமல் ஹாசனை வெளுக்கும் நெட்டிசன்கள்..

ஆண்டுக்கணக்கில் எடுக்க இது என்ன தசாவதாரமா.? உயிர் பிரச்சனையால் தான் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.! கமல் ஹாசனை வெளுக்கும் நெட்டிசன்கள்..

Update: 2020-04-07 08:07 GMT

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 23ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன்.

அதில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதற்கு அடுத்த நாளே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முறையாக திட்டமிடப்படாமல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுனால் தினக்கூலி, வீட்டுவேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், புலம்பெயர்ந்த மக்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் திரைப்படத்தை ஆண்டுக்கணக்கில் எடுத்தார். அது போன்று நினைத்து விட்டார் கொரோனா வைரஸை. கொரோனா வைரஸ் என்பது மனிதர்களை எளிதில் தாக்கும் ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும்.

உலகமே இன்று இந்தியாவை உற்று நோக்குகிறது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்கள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுதான். இந்த உத்தரவால் 130 கோடி மக்கள் இன்று கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பாக வீடுகளில் தனிமைப்பட்டுள்ளனர்.

4 ஆயிரம் பேர் மட்டுமே இந்தியாவில் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் உயிரிழப்புகள் 50 க்கும் மேற்பட்டவர்களே. ஆனால், சீனா, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், பாரீஸ் போன்ற நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர்.

இது போன்ற பாதிப்பு இந்தியாவில் வந்திருந்தால் லட்சக்கணக்கான மக்களின் இறப்பை யாராலும் தடுத்திருக்க முடியாது. ஒரு நாட்டு பிரதமருக்கு தெரியும் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும், பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கான உணவு பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது மத்திய அரசு.

அதே போன்று ஏழைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர், லோன், வாகன கடன் போன்றவைகள் 3 மாதங்கள் கட்ட தேவையில்லை என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏழைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

மக்களுக்கு பாதிப்பு என்றால் அதை அரசு சரிசெய்யும். எனவே நடிகர்கள் மக்களை பீதியடைய செய்யாமல் இருந்தாலே கொரோனா வைரஸை அரசு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.

Similar News