இனி பாகிஸ்தான் எங்க ஓடினாலும் வேலைக்கு ஆகாது - இந்தியாவுடன் கை கோர்த்த உலக ஜாம்பவான் நாடு.!

இனி பாகிஸ்தான் எங்க ஓடினாலும் வேலைக்கு ஆகாது - இந்தியாவுடன் கை கோர்த்த உலக ஜாம்பவான் நாடு.!

Update: 2019-08-28 11:32 GMT

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க சீனா உதவியுடன் அந்த நாடு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.


ஆனாலும் பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை பெறும் முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அவர் 2 முறை அறிவித்தார். ஆனால் இதை இந்தியா நிராகரித்துவிட்டது. காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிட விரும்பமாட்டோம் என்று தெரிவித்தது. இதை ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி டிரம்பிடம் உறுதிபடுத்தினார்.


இந்தநிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ரஷியா தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷிய தூதர் நிகோலி குட்சேவ் இது தொடர்பாக கூறும்போது, ‘காஷ்மீர் இந்தியாவின் உள் விவகாரம். அதில் நாங்கள் தலையிடமாட்டோம். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.


Similar News