பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று கிரண்பேடி மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கேற்றி ஒளிரச் செய்தார்..

பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளை ஏற்று கிரண்பேடி மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கேற்றி ஒளிரச் செய்தார்..

Update: 2020-04-06 03:15 GMT

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 99 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 99 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுச்சேரி அரசும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே மக்களிடம் பேசிய பாரத பிரதமர் மோடி, இன்று(05.04.20) இரவு 9 மணிக்கு மக்கள் தங்களது வீடுகளில் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் ராஜ்நிவாசில் மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கை ஏற்றி ஒளிரச் செய்தார். மேலும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போன் லைட் மூலமும் ஒளிரச் செய்தனர். 9நிமிடம் வரை கையில் விளக்கை ஏந்திய படி மனிதகுலத்தை குணமாக்குங்கள் என கடவுளிடம் வேண்டினார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

Similar News