ஒட்டுமொத்த தமிழகமே பல வருடங்களாக எதிர்நோக்கியது - இன்று காலை வெளியான அறிவிப்பு : சமபலம் காணும் பெண்கள்.!

ஒட்டுமொத்த தமிழகமே பல வருடங்களாக எதிர்நோக்கியது - இன்று காலை வெளியான அறிவிப்பு : சமபலம் காணும் பெண்கள்.!

Update: 2019-06-03 06:29 GMT

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ஜுலை 2-வது வாரம் நிறைவு பெறும் என்று கூறப்பட்ட நிலையில் இடஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தமுள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப்பிரிவிற்கு 79 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 82 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் 3 ஆண்டு காலம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன.


Similar News