இனி இஷ்டம் போல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது - பயங்கரவாதத்தை இறுக்கி பிடிக்கும் அமித் ஷா : மக்களவையில் நிறைவேறிய மசோதா.!

இனி இஷ்டம் போல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது - பயங்கரவாதத்தை இறுக்கி பிடிக்கும் அமித் ஷா : மக்களவையில் நிறைவேறிய மசோதா.!

Update: 2019-07-24 12:34 GMT

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.


சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.


பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த திருத்தம் வழிவகை செய்கிறது. சைபர் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்க இந்த சட்டத்திருத்தம் அனுமதி அளிக்கும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 4-வது அட்டவணையில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபரை விசாரிக்க என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறது. தற்போது பயங்கரவாத அமைப்புகளை மட்டுமே பட்டியலிட்டு விசாரிக்கும் அதிகாரம் என்ஐஏவுக்கு உள்ளது. இந்த நிலையில் தான் பயங்கரவாத தடுப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.


உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்


இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பயங்கரவாததிற்கு எதிராக ஒரு பலமான சட்டம் தேவைப்படுகிறது. ஆகவே தான் இந்தச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்பவர்களும் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த மசோதா ஒரு போதும் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்தார். இதனையடுத்து மக்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு பின் நிறைவேற்றப்பட்டது.


Similar News