கன்னடக் காரர் தேவகௌடாவை பிரதமர் ஆக்குங்கள் : ராகுல், பிரியங்காவை உதறி தள்ளும் காங்கிரஸ் கூட்டணி முதல்வர்

கன்னடக் காரர் தேவகௌடாவை பிரதமர் ஆக்குங்கள் : ராகுல், பிரியங்காவை உதறி தள்ளும் காங்கிரஸ் கூட்டணி முதல்வர்

Update: 2019-02-28 05:35 GMT

காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் முதல்வர் ஆகியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதற்கு முன்பு பல முறை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.


தற்போது, கன்னட காரரான தேவகௌடாவை பிரதமர் ஆக்க வேண்டும் என்று கர்நாடக மக்களை முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தினார் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின். இதை காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ராகுலின் சகோதரியான பிரியங்கா வத்ராவை காங்கிரஸ் கட்சி உள்ளே இழுத்து அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டது. இது வரை நிஜ அரசியல் களத்தையே காணாத பிரியங்காவை இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு பிரியங்காவை கொண்டாட துவங்கினர் காங்கிரஸ் கட்சியினரும், காங்கிரஸ் ஆதரவு ஊடகவியளாளர்களும். தற்போது ராகுல், பிரியங்கா என இருவரையும் உதறி தள்ளி தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகெளடாவை பிரதமர் ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கர்நாடக முதல்வர் குமாரசாமி கேட்டுக்கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியை முகம் சுழிக்க வைத்துள்ளது.




https://twitter.com/ANI/status/1100982739271061504?s=19

Similar News