வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தனி குழு - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு தனி குழு - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

Update: 2020-04-17 05:39 GMT

சென்னை திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் சோப்பு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வட மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியில் அந்தந்த மாநில அரசுகளுடன் பேசி மீட்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருவதாகவும் சில மாநிலங்களில் அனுமதி பெறுவதற்கு சிக்கல் உள்ளதால் அவர்களை மீட்க காலதாமதம் ஆவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள 12 குழுவில், ஒரு குழு இதற்காகவே வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க படு வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது அவர்கள் அந்த வேலையைச் செய்து வருவதாகவும் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் முதலமைச்சருக்கு நேரடியாக ட்விட்டர் மூலமோ அல்லது 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால் நிச்சயம் உதவி செய்யப்படும் என தெரிவித்தார்.

Similar News