சண்முக கவசத்தை பாராயாணம் செய்ததால் பாம்பன் சுவாமிகளுக்கு நிகழ்ந்த அதிசயம்.!
சண்முக கவசத்தை பாராயாணம் செய்ததால் பாம்பன் சுவாமிகளுக்கு நிகழ்ந்த அதிசயம்.!
முருக பக்தர்களான எல்லோருக்கும் கந்த சஷ்டி கவசம் தெரியும் ஆனால் அதற்கு நிகரான அதை விட எளிமையான 30 பாடல்களை கொண்ட சண்முக கவசம் பற்றி தீவிரமான முருக பக்தர்கள் சிலருக்கே தெரிந்திருக்கும். இந்த சண்முக கவச பாராயாணம் நோய்களை வராமல் தடுத்தும் நோய் வாய்பட்டவர்களை அந்த வியாதியிலிருந்து காப்பாற்றவும் உதவும்.
இதை பாம்பன் சுவாமிகள் இயற்றி பாராயாணம் செய்த போது முருகனே நேரில் காட்சி அளித்து அவரை காப்பாற்றினார் என்பது நிஜமான வரலாற்று செய்தியாகும். இந்த சண்முக கவசம் இன்றும் கோடான கோடி முருக பக்தர்களின் பிணி தீர்க்கும் அருமருந்தாக உள்ளது. இந்த நூலோடு சேர்த்து நாலாயிர திவ்ய விசாரம் எனும் வேத நூலையும் , பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் எனும் அபிஷேக பலன் தரும் நூலையும் பக்தி சிரத்தையோடு ஒருவர் வாசித்தால் அங்கு முருகன் காட்சி தருவான் என்பது பாம்பன் சுவாமிகள் வாக்கு.
சுவாமிகள் 79 ஆண்டுகள் வாழ்ந்து சென்னை திருவான்மியூரில் மகா சமாதி அடைந்தார். இவர் தன்னுடைய 73 ஆவது வயதில் சென்னை தம்பு செட்டி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது குதிரை வண்டி மோதி இடது கால் முறிந்தது . அப்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
சுவாமிகளுக்கு வயது 73 ஆனதாலும் உணவில் உப்பு சேர்த்து சொள்ள மாட்டார் என்பதாலும் அறுவை சிகிச்சை செய்ய இயலாது என டாக்டர்கள் மறுத்து விட்டனர். சுவாமிகள் தான் இயற்றிய சண்முக கவசத்தை பாராயாணம் செய்த படி இருந்தார். அன்று 1924 ஜனவரி 6 ஆம் தேதி , அன்று ஒரு அதிசயம் நிகழ்ந்தது . சுவாமிகள் மருத்துவமனையில் சேர்ந்து 11 ஆம் நாள் அது . சுவாமிகள் திடீரென்று இரு மயில் கள் தோகை விரித்து ஆடுவதை கண்டார். இன்னும் 15 நாளில் கால்கள் குணமடையும் என அசரீரி ஒலித்தது.
குழந்தை வடிவத்தில் முருகன் காட்சி அளித்தார் . அதே போல் 15 நாட்களில் சுவாமிகள் சுகமடைந்தார். இன்றும் அந்த அரசு மருத்துவமணை வார்டில் இந்த நிகழ்வு கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது . இன்றும் திருவான்மியூரில் அவரது ஜீவ சமாதியில் மார்கழி வளர்பிறையன்று பூஜைகள் நடக்கின்றன. இவர் முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு 6666 பாடல்களை இயற்றியுள்ளார். அருணகிரி நாதருக்கு முத்தைதிரு என அடியெடுத்து கொடுத்ததை போல் கங்கையை சடையில் பரித்து எனும் வரியை முதலடியாக எடுத்து கொடுத்துள்ளார். இவரை இரண்டாவது அருண கிரி என அழைக்கிறார்கள்.