கொரோனா பரவலை தடுக்க.. தர்மபுரியில் நடமாடும் காய்கறி அங்காடி திறப்பு.!

கொரோனா பரவலை தடுக்க.. தர்மபுரியில் நடமாடும் காய்கறி அங்காடி திறப்பு.!

Update: 2020-04-10 06:40 GMT

தமிழ்நாடு அரசு மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி உத்தரவின் பேரில் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடமாடும் காய்கறி அங்காடி திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருவதை தவிர்க்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சுப்ரமணிய சிவா கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலமாக நடமாடும் காய்கறி அங்காடி பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் மணிராஜன், பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் சதிஷ்குமார், துணை வேளாண் அலுவர்கள் பெரியசாமி, செல்வம், சத்யா, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

சுப்பிரமணிய சிவா கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் சின்னசாமி, இயக்குனர்கள் கணபதி, (சிலம்பரசன் எர்ரபையன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர்) ரவி, தனசேகரன், முருகன், சரவணன், கஸ்தூரி நாகராஜ், கணேசன், முனியப்பன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஏராளமான பொதுமக்கள் காய்கறியை வாங்கி சென்றனர். அரசு நிர்ணயம் செய்த விலையில் மட்டுமே காய்கறி விற்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

Similar News