சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற ஆற்றல்களை பெரியளவில் செயல்படுத்தும் மோடி அரசின் திட்டங்கள் !

சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற ஆற்றல்களை பெரியளவில் செயல்படுத்தும் மோடி அரசின் திட்டங்கள் !

Update: 2018-12-19 12:43 GMT
பருவநிலை மாற்றம் காரணமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை உருவாக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. மே மாதம் 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 2018 ஆம் தேதி வரை 37.33 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை உயர்த்தி, மொத்தமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் திறன் 69 GW அளவிற்கு உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்க்குள் 175 GW அளவிற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன்  அரசு காற்று சக்தி மற்றும் சூரிய சக்தியின் கலப்பினமுடைய திட்டங்கள், கடல் காற்று மின் திட்டங்கள், உயிர்ம சக்தி திட்டங்கள், சூரிய சக்தி பூங்காக்கள் ஆகிய திட்டங்களை துவக்கியுள்ளது.
விலை அதிகமாக இருந்த சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி ஆற்றல்களின் விலை குறைந்து கடந்த ஜூலை மாதம் அளவில் சூரிய சக்தி ஆற்றலின் விலை 2.44 ரூபாய்க்கும், காற்று சக்தி ஆற்றலின் விலை 2.64 ரூபாய்க்கும் சரித்திரளவில் குறைந்தது.
சூரிய சக்தி பூங்கா மற்றும் அல்ட்ரா மெகா சூரிய சக்தி ஆற்றல் திட்டம் ஆகியவற்றின் திறன் 20 ஜிகாவாட்டிலிருந்து 40 ஜிகாவாட்டிற்கு உயர்த்தப்பட்டது. ஸ்மார்ட் நகரம் உருவாக்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளில் சூரிய சக்தி தகடுகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 10 சதவீதம் பயன்படுத்தவேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
காற்று சக்தி திறனின் மதிப்பீடு தேசிய காற்று சக்தி கழகத்தால் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இந்த மறுமதிப்பீட்டில் காற்று சக்தியின் திறன் 302 ஜிக்வாட்டாக மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்தியாவில் கடற்கரை பகுதி நீளமாக இருப்பதால், அங்கே கடல் காற்று மின் திட்டங்களை செயல்படுத்தும் திறன் உண்டு. இதன் அடிப்படையில் இந்தியா அமைச்சரவையால் தேசிய கடற்கரை காற்று சக்தி திட்டம் (National Offshore Wind Energy Policy) அமல்படுத்தப்பட்டது.
பருவநிலை மாற்றம் உலகளாவிய பிரச்னை என்பதால் மோடி தனது நோக்கத்தை உலகளவில் கொண்டு சென்று சர்வதேச சூர்ய சக்தி கூட்டமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் நோக்கம் உலகளவில் சூரிய சக்தியை மிக ஆற்றல் மிக்க முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினை குறைக்கவேண்டும் என்பதும் ஆகும். இதில் இப்பொழுது 121 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் ஐக்கிய நாடுகள் அவை (United Nations) இவருக்கு "Champion of the Earth" என்ற விருதையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News