நாடு முழுவதிலும் 90% மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தகவல்..

நாடு முழுவதிலும் 90% மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தகவல்..

Update: 2020-04-06 03:13 GMT

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையுடன் தீப ஒளியேற்ற வேண்டுமென பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தானர் அதனை ஏற்று புதுச்சேரி மாநில மாநில முதலமைச்சர் நாராயணசாமி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் 9 மணி முதல் 9.09 வரை வீட்டில் மின் விளக்குகளை அனைத்துவிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கொரோனாவிற்கு எதிராக ஆதரவு தெரிவித்தார் மேலும் பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மாநிலம் முழுவதில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் விளக்கேற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றியும், செல்போன் மூலம் ஒளியை காண்பித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி, பாரத பிரதமர் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி மாநில மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றினர் என்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் மேலும் கொரோனா விஷியத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் மாநில அரசுகளிடம் நிதி இல்லாத நிலையில் ஆக்கப்பூர்வமாக கொரோனாவிற்கு தேவையான மருந்துகள், கவசங்கள் மற்றும் மாஸ்க்குகளை மத்திய இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் செல்வதை மக்கள் கடைபிடிக்கின்றனர் கொரோனாவை ஒழிக்க தீர்வு காண வேண்டிய கடமை பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு உண்டு இதனை வழி நாடத்த வேண்டியவர் பாரத பிரதமர் 11லட்சம் கோடி ரூபாயை நாட்டு மக்களுக்கு கொடுத்த பொருளாதாரத்தை மேம்பட்டுத்த வேண்டுமென பொருளாதார மேதைகள் பிரதமருக்கு வலியுருத்தி உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்களை அழைத்து பாரத பிரதமர் ஆலோசனை கேட்க செயல்பட வேண்டும் என்றும் நாட்டில் உள்ள 90% மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Similar News