டிஜிட்டல் வேளாண்மை சுற்றுச் சூழலை உருவாக்கும் மத்திய அரசு: கையெழுத்தான ஒப்பந்தம்!
மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் தேசிய டிஜிட்டல் அணுகுமுறையை உருவாக்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் தேசிய டிஜிட்டல் அணுகுமுறையை உருவாக்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டு இருக்கிறது. பசுமை இந்தியா இலக்கை அடைய ஏதுவாக தனியார் பங்களிப்புடன் தேசிய அளவிலான டிஜிட்டல் அணுகுமுறையை உருவாக்குவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
விவசாயம், தோட்டக்கலை, மீன்வளர்ப்பு, கால்நடைப் பராமரிப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான இயக்கங்கள் மூலம் ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகளை வழங்க ஏதுவாக டிஜிட்டல் நூலகத்தை அமைக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய அந்த அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் அஹுஜா கூறுகையில், டிஜிட்டல் வேளாண்மை சுற்றுச்சூழலை உருவாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு இந்த ஒப்பந்தம் விவசாயிகளை இணைத்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Input & Image courtesy: News