இந்தியாவில் புது உச்சம் தொட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி : 2040-ம் ஆண்டிற்குள் தேவை மும்மடங்காக உயரும்.!

இந்தியாவில் புது உச்சம் தொட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி : 2040-ம் ஆண்டிற்குள் தேவை மும்மடங்காக உயரும்.!

Update: 2019-07-10 10:08 GMT

மே மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 27 லட்சம் கனமீட்டராக உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி 26 லட்சம் கனமீட்டராக இருந்தது. ஆக, உற்பத்தி 0.40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதிகபட்சமாக 21 லட்சம் கனமீட்டர் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 20 லட்சம் கனமீட்டராக இருந்தது.


ஆயில் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 1.52 சதவீதம் அதிகரித்து 2.31 லட்சம் கனமீட்டராக இருக்கிறது. எனினும், தனியார் நிறுவனங்களின் உற்பத்தி ஒட்டுமொத்த அளவில் 7 சதவீதம் குறைந்து 4.25 லட்சம் கனமீட்டராக உள்ளது.


உலக அளவில் எரிசக்தி பயன்பாட்டில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்து அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. நம் நாட்டின் எரிசக்தி தேவைபாடு 2040-ம் ஆண்டிற்குள் மூன்று மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாடு கத்தார், நைஜீரியா, அமெரிக்கா, அங்கோலா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.


Similar News