ஆந்திரா: மிஷினரி தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமத்தை ரத்து செய்ய NCPCR பரிந்துரை!

ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய மிஷனரி குழு ஒன்றின் FCRA உரிமத்தை ரத்து செய்ய NCPCR தற்பொழுது பரிந்துரைத்துள்ளது.

Update: 2022-03-11 01:53 GMT

சட்ட உரிமை பாதுகாப்பு மன்றம் (LRPF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவன கண்காணிப்பு அமைப்பு அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆந்திராவில் உள்ள கிறிஸ்தவ மிஷியாரி NGOவின் FCRA உரிமத்தை ரத்து செய்யுமாறு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) பரிந்துரை செய்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள AMG இந்தியா இன்டர்நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் குழந்தைகளை மதமாற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியதாக LRPF புகார் அளித்துள்ளது.


தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் (NCPCR) அளித்த புகாரில், வெவ்வேறு மையங்கைளில் தங்கி படிக்கும் சிறு ஆதரவற்ற குழந்தைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், பிறந்த தேதி, இருப்பிடம், குடும்பம் மற்றும் நிதிப் பின்னணி போன்ற முக்கியமான தகவல்கள் பல்வேறு நிறுவனங்கள் இடம் தெரிவிக்கின்றன. AMG இந்தியா இன்டர்நேஷனல் மூலம் நடத்தப்படும் இந்த அமைப்புக்கு நிதியளிக்கும் வெளிநாட்டு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளன.  "ஆதரவற்ற மைனர் குழந்தைகளின் முக்கியமான தகவல்களைப் பகிர்வது சிறார் நீதிச் சட்டம், 2015 இன் பிரிவு 74 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 228A ஆகியவற்றின் கீழ் குற்றமாகும்" என்று புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


சிறார் நீதிச் சட்டம், 2015ன் கீழ் குழந்தையின் பெயர், முகவரி, வயது, பள்ளியின் பெயர் போன்றவற்றை எந்தவொரு ஊடகத் தளத்திலும் வெளியிட தடை உள்ளது. இதனால் குழந்தையின் ரகசியத்தன்மை பராமரிக்கப்படுகிறது. இதையும் மீறி இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் இதை செய்துள்ளது. "பொது மேடைகளில் குழந்தைகளின் இத்தகைய முக்கியமான தரவுகளை வெளிப்படுத்துவது அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் குழந்தைகளை கடத்தல், துஷ்பிரயோகம், கொடுமை, சட்டவிரோத தத்தெடுப்பு போன்றவற்றுக்கு ஆளாக்குகின்றன" என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் AMG இந்தியா இன்டர்நேஷனல் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் தஞ்சம் அடையும் மைனர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த வழக்கில் தற்பொழுது உள்துறை அமைச்சகம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதில் தலையிடும் படி பரிந்துரை செய்துள்ளது. 

Input & Image courtesy:  Law in force

Tags:    

Similar News