வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு: இனிமேல் ஒரு தடவை ஒருவருக்கு மட்டுமே FORWARD செய்யமுடியும்..

வாட்ஸ் அப்பில் புதிய கட்டுப்பாடு: இனிமேல் ஒரு தடவை ஒருவருக்கு மட்டுமே FORWARD செய்யமுடியும்..

Update: 2020-04-07 11:25 GMT

கரோனா வைரஸ் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வீணான வதந்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது.

இணைய வலைத்தளம் மூலம் இயங்கும் வாட்ஸ் அப்பில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் போலி செய்திகளை பரப்புவதன் மூலம் இதை பலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான நேரங்களில் பீதி கிளப்பபடுகின்றன.

தற்போது கொரோனா தொற்று நேரத்தில் விஷமிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் 5 நபர்களுக்கு ஒரே சமயத்தில் FORWARD செய்யும் வகையில் உள்ள தற்போதைய வசதியை குறைத்து இனி ஒரு சமயத்தில் ஒரு நபருக்கு மட்டுமே FORWARD செய்யமுடியும் என்கிற புதிய கட்டுப்பாட்டை வாட்ஸ் நிறுவனம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Similar News