இந்தியா-சிங்கப்பூர் கடற்படையின் முழு ஒத்துழைப்பு.. பாதுகாப்பை மேம்படுத்தும் இரு நாடுகள்..
தென் சீனக் கடலில் கிழக்கு கடற்படையின் செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்தான் ஆகியவை சிங்கப்பூருக்கான பயணத்தை நிறைவு செய்தன. இருதரப்பு ஈடுபாடுகளை மேற்கொள்வது, பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து விவாதிப்பது மற்றும் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம் படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் மேற்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி, சக்தி, கில்டன் ஆகியவை 2024, மே 6-ம் தேதி முதல் 9-ம் வரை சிங்கப்பூருக்கு பயணம் மேற் கொண்டன. தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் மேற் கொள்ளப்பட்டது.
கிழக்குக் கடற்படையின் கொடி அதிகாரி மற்றும் கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், சிங்கப்பூர் கடற்படை தலைமையகத்தில் சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் கடற்படை தளபதியுடன் கலந்துரையாடினர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் கடற்படைகளுக்கு இடையே கடற்படை ஒத்துழைப்பு மற்றும் இயங்கும் தன்மையை மேம்படுத்துவது குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை இந்தப் பயணம் வழங்கியது. ஐ.என்.எஸ் சக்தி கப்பலில் ஒரு தள வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடற்படை மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர், உள்ளூர் ராஜதந்திர சமூகத்தைச் சேர்ந்த பணியாளர்கள், நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையின் பிணைப்புகளை மேம்படுத்தும் வகையில் கலந்துரையாட வாய்ப்புக் கிடைத்தது.
கடல்சார் கல்வி, இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, உள்ளூர் பள்ளிக் குழந்தைகள் இந்தியக் கப்பல்களைப் பார்வையிட அழைக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு கப்பல்களின் வழிகாட்டுதல் சுற்றுப்பயணங்கள் குறித்து விளக்கப்பட்டது. அங்கு அவர்கள் கடற்படை நடவடிக்கைகள், இந்தியாவின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் பாரம்பரியம், கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடல்கள் இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன், கடல்சார் விவகாரங்கள் குறித்த சிறந்த புரிதலை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
Input & Image courtesy: News